மஸ்ரூர் – இது அங்கோர் வாட்டின் முன்னோடியா?

சென்ற வாரம் நண்பர் லக்ஷ்மி சரத் அவர்கள் தனது தளத்தில், ஒரு இடுகை இடும்படி கேட்டார்.

பல விஷயங்களில் தலையை நுழைத்து வழி தெரியாமல் திரிந்த எனக்கு சிற்ப கலை ஒரு அதீத மன அமைதியை தந்தது – கல்லின் மேல் ஏற்பட்ட காதல், இந்த அழியும் கலையின் மேல் ஏற்பட்ட மோகம், ஆடாமல் நின்று நம்மை நெகிழ்விக்கும் இந்த சிற்பங்கள் – அவற்றின் மொழி என்னை அவற்றின் வசம் இழுத்து ,ஆயுள் கைதி ஆக்கி விட்டது.

லக்ஷ்மி அவர்களின் தளம் மிக அருமையான நம் பழைய நினைவுகளை தூண்டும் தளம். அதனால் சிற்பகலை மற்றும் சுற்றுலா இரண்டும் சேருமாறு ஒரு இடுகை தயார் செய்தேன் – அதுவே மஸ்ரூர்.

http://backpakker.blogspot.com/2008/09/post-from-guest-blogger-was-this.html

சில மாதங்களுக்கு முன் மல்லை சோதனை சிற்பம் சார்ந்த புகை படம் தேடும் பொது, எனது சிறு வயது நண்பர் திரு ஆல்பர்ட் கண்ணில் பட்டர்,பழங்கதை பேசிவிட்டு அவ்வப்போது தொடர்பில் இருந்தோம். சில வாரங்கள் கழிந்த பின்னர், . அவர் ஹிமாச்சல பிரதேசம் சென்று அங்கு உள்ள மஸ்ரூர் ( himachal pradesh – masroor rock cut caves) குடவரை சென்றதாகவும், அங்கு எடுத்த படங்களை எனக்கு அனுப்பி வைத்தார். படங்களை பார்த்தவுடன் திகைத்து போனேன் !
177717811783
வட இந்தியாவில் இருக்கும் குடவரை, அதுவும் மலையின் உச்சியில் இருப்பவை, எட்டாம் நூற்றாண்டு, சிவன் கோயில், ( தர்மசால அருகில் ). இதுவரை பல குடைவரைகள் நம் பார்த்தோம் – தென் இந்தியா , தெற்கு இந்தியா என்று – எனினும் ஹிமாச்சல பிரதேசத்தில் இப்படி ஒரு குடவரையா என்று திகைத்தேன்.
17751779
பார்ப்பதற்கு அங்கோர் வாட் போலவே உள்ளன. அங்கோர் நிறுவியது பதினோராம் நூற்றாண்டு , மஸ்ரூரோ எட்டாம் நூற்றாண்டு. இரண்டு படங்களையும் பாருங்கள், என்ன ஒரு ஒற்றுமை , முன்னால் இருக்கும் குளத்து நீரில் கோபுரத்தின் அழகு பிரதிபலிக்கிறது.
17721785
http://news.nationalgeographic.com/news/2007/08/photogalleries/Angkor-pictures/

காலத்தினால் மிகவும் சிதைந்தாலும் மஸ்ரூர் இன்றும் அழகு தான். அங்க்கொரின் அழகும் அதன் சிதைவினால் தானே. ஒருவேளை மஸ்ரூர் அங்க்கொரின் முன்னோடியா ?

காலணி அணிந்த பக்தன்

1793
தாராசுரம் ஐராவதேசுவர கோவிலில் மிக அழகிய கண்ணப்பநாயனார் சிலை இருக்கிறது. தோள்களில் வில்லுடன்,இரு கைகளையும் கூப்பி முகத்தில் பக்தி பரவசத்துடன் இருக்கும் மிக அழகிய சிலை – ஆனால் சற்று அவர் காலில் பாருங்கள் – அழகிய காலணிகள்.

பொதுவாக கோவில்களில் நாம் காலணி அணிந்து செல்வதில்லை – அதே போல உள்ளே இருக்கும் சிற்பங்களும் பெரும்பாலும் காலணிகளுடன் இருப்பதில்லை – -இதற்கு இரு சிற்பங்கள் விதி விலக்கு – ஒன்று சிவ பிட்சாடண உருவம். மற்றொன்று கண்ணப்ப நாயனார்.
1796
காலணிகளுடன் கண்ணப்பநாயனார் சிலையை சிற்பி ஏன் செதுக்கினான் ? மீண்டும் திருமுறையில் விடை காண்போம் ( நன்றி திரு V. சுப்பிரமணியன் )

நான்காம் திருமுறை

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=4&Song_idField=40490&padhi=049&startLimit=7&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

காப்பதோர் வில்லு மம்புங் கையதோ ரிறைச்சிப் பாரம்
தோற்பெருஞ் செருப்புத் தொட்டுத் தூயவாய்க் கலச மாட்டித்
தீப்பெருங் கண்கள் செய்ய குருதிநீ ரொழுகத் தன்கண்
கோப்பதும் பற்றிக் கொண்டார் குறுக்கைவீ ரட்ட னாரே
1789
காவல் செய்வதற்குரிய வில்லும் அம்பும் ஒரு கையிலும், நிவேதனத்திற்குரிய இறைச்சிச் சுமை மற்றொரு கையிலும் பொருந்த, காலில் தோலாலாகிய பெரிய செருப்பினை அணிந்து, தூயவாயினில் நீரைக்கொணடு கலசநீரால் அபிடேகிப்பது போல எம் பெருமானை அபிடேகித்து, அப்பெருமானுடைய ஒளிவீசும் பெரிய கண்களில் இரத்தம் பெருகி ஒழுகத் தன் கண் ஒன்றனைப் பெயர்த்து முதலில் ஒரு கண்ணில் அப்பிப்பின் மற்றொரு கண்ணைப் பெயர்க்க அதன்கண் அம்பினைச் செலுத்திய அளவில் அத்திண்ணனுடைய கையைப் பற்றிக்கொண்டார் குறுக்கை வீரட்டனார்.

சிற்பி தான் செதுக்கும் சிற்பத்தை பற்றி எந்த அளவிற்கு ஆராய்கிறான் பாருங்கள்

படங்களுக்கு நன்றி
http://www.kumbakonam.info/kumbakonam/darsuam/

ஒரு சிறு கிறுக்கல் ஒருவரை சரித்திரத்தில் இடம்பெற செய்தது…

திருமதி லட்சுமி சரத் அவர்களின் இந்த இடுகை பார்த்தவுடன் நான் முன்னர் மின்தமிழில் இட்ட மடல் நினைவுக்கு வந்தது

http://backpakker.blogspot.com/2008/09/india-through-my-eyes_21.html

ஏப்ரல் மாதம் 1819 ஆம் ஆண்டு , ஜான் ஸ்மித் ( John smith) என்ற சென்னை (
அப்போது மதராஸ் )ரெஜிமேன்டை சார்ந்த ஆங்கிலேய கேப்டன் – தனது
சகாக்களுடன் அடர்ந்த காடுகளில் புலி வேட்டையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அவர் ஒரு குதிரை லாடம் போன்ற பள்ளத்தாக்கில் பல குகைகளை கண்டார்.
ஆம் – அவர்தான் அஜந்தா குகைகளை மீண்டும் கண்டு பிடித்தவர்.

அவர் அதனுடன் நிறுத்தவில்லை – அற்புத ஓவியங்களை உடைய அச்சுவரில் தனது
கையெழுத்து மற்றும் தேதியை கிறுக்கினார். இதோ அந்த வரலாற்று அம்சம்
பொருந்திய அவரது கையெழுத்து
17471749
– ஒரு சிறு கிறுக்கல் ஒருவரை சரித்திரத்தில் இடம்பெற செய்தது.

இந்த செயலை பின்பற்றி தானோ இன்று பல ரோமியோக்கள் ( tanjore s.mani ???)
தங்கள் பெயர்களை வரலாற்றில் பல சாகசங்களை புரிந்து அவற்றை கல்லில்
செதுக்கிய நமது ஒப்பற்ற அரசர்களுக்கு சமமாக இடுகின்றனர்.
17411745
கங்கை கொண்ட சோழபுரத்தில் – நமது கிறுக்கன் கைவரிசை -. பரிட்சையில்
ஒரு வரி கூட எழுத மாட்டார்கள் -இங்கே சாசனம் எழுதுகிறார்கள். இவர்களை
மாறு கால் மாறு கை வாங்கவேண்டும்

முதலையின் வாயினுள் சென்றது மீளுமா?

ஹனுமான் முதலையின் வயிற்றில் இருந்து வெளி வந்ததை முன்னர் பார்த்தோம். இப்பொது அதேபோல இன்னொன்று.

தாராசுரம் கோவில் சிற்பம் – பெரியபுராண கதைகளில் ஒன்று – அவினாஷியில் சுந்தரர் முதலையால் விழுங்க பட்ட சிறுவனை உயிர் பித்த கதை,
1640
சுந்தரமூர்த்தி சுவாமிகள் முதலை உண்ட பாலகனை அவினாசி சிவபிரானை வேண்டிப் பதிகம் பாடி மீட்டுத்தந்த அற்புதம் – சிற்பத்தில்.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=7&Song_idField=70920&padhi=092&startLimit=4&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

7.92.4

உரைப்பார் உரைஉகந் துள்கவல் லார்தங்கள் உச்சியாய்
அரைக்கா டரவா ஆதியும் அந்தமும் ஆயினாய்
புரைக்காடு சோலைப் புக்கொளி யூர்அவி னாசியே
கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே.

உன்னைப் புகழ்கின்றவர்களது சொல்லை விரும்புபவனே, உன்னை எஞ்ஞான்றும் மறவாது நினைக்க வல்லவரது தலைமேல் இருப்பவனே, அரையின்கண் ஆடுகின்ற பாம்பைக் கட்டியுள்ளவனே, எல்லாப் பொருட்கும் முதலும் முடிவுமானவனே, சிறந்த முல்லை நிலத்தையும், சோலைகளையும் உடைய திருப்புக்கொளியூரில் உள்ள, ` அவினாசி ` என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, கூற்றுவனையும் முதலையையும், இக்குளக் கரைக்கண் பிள்ளையைக் கொணர்ந்து தருமாறு ஆணையிட்டருள்.

அவர் பாடிய திருப்பதிகத்தில், `கரைக்கால் முதலையை பிள்ளைதரச் சொல்லு காலனையே` என வேண்டிப்பாடுவதைக் காணலாம்.

முதலையுண்ட வரலாறு: ஐந்து வயது நிரம்பப் பெற்ற அந்தணச் சிறுவர் இருவர், இங்குள்ள நீர் நிலையில் குளித்தபோது ஒரு சிறுவனை முதலை விழுங்கிற்று. மற்றொருவன் அதன்வாயில் அகப்படாது பிழைத்துத் தம் இல்லம் சேர்ந்து, நிகழ்ந்ததை அச்சிறுவனின் பெற்றோரிடம் தெரிவித்தான். அவனின் பெற்றோர் மிக்க துயருற்றனர். இது நிகழ்ந்து சில ஆண்டுகளான நிலையில் உயிர் பிழைத்த அந்தணச் சிறுவனுக்கு அவனுடைய பெற்றோர் உபநயனச் சடங்கு நடத்தினர். அவனது இல்லத்தில் மங்கல ஒலி கேட்ட அளவில் முதலையுண்ட சிறுவனின் பெற்றோர் இன்று நம் மகன் நம்முடன் இருந்தால் அவனுக்கும் உபநயனம் செய்வித்து மகிழலாமே என மனங் கவன்றனர். அவர்களின் நற்காலம் சுந்தரர் அத்தலத்துக்கு எழுந்தருளினார்.

சுந்தரர் திருவாரூரிலிருந்து சேரமான் பெருமாள் நாயனாரின் அழைப்பினை ஏற்று, அவரைச் சந்திக்கத் திருவுளம் கொண்டு சோழநாடு கடந்து, கொங்கு நாட்டை அடைந்தார். அவிநாசி என்னும் இத்தலத்திற்கு வந்தபோது, ஒருவீதியில் ஒருவீட்டில் மங்கல ஒலியும், எதிர் வீட்டில் அழுகை ஒலியும் கேட்பதை அறிந்து இவ்வாறு நிகழக் காரணம் யாது என வினவினார்.

நிகழ்ந்ததை அவ்வூர் வேதியர்கள் உரைத்தனர். அவ்வேளையில் சுந்தரர் தம் ஊருக்கு எழுந்தருளி வந்துள்ளார் என்பதைக் கேட்டு, மகனை இழந்து வருந்திய அந்தணர் அழுகை நீங்கி, மலர்ந்த முகத்துடன் அவரை வரவேற்று வணங்கினார். சிறந்த சிவபக்தராகிய இவ்வந்தணரின் மகனை முதலையிடமிருந்து மீட்டுத் தந்த பின்னரே, திருக்கோயில் வழிபாடு செய்ய வேண்டுமெனச் சுந்தரர் முடிவு செய்து, முதலை வாழ்ந்த நீர்நிலையை அடைந்து, அவிநாசி இறைவனை வேண்டி `எற்றான் மறக்கேன்` என்னும் திருப்பதிகத்தைப் பாடினார்.

அம்முதலை, தான் உண்ட மதலையைக் கரையின் கண் உமிழ்ந்து மீண்டது.அவனது பெற்றோரும் மற்றவரும் இவ்வற்புதத்தைக் கண்டு அதிசயித்தார்.
16371642

http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=213

Thanks to Mr. V. Subramanian, for his valuable guidance with regard to the verse references.
http://www.geocities.com/nayanmars

கல் சங்கிலியில் பூத்த பூவை மொய்க்கும் கிளிகள்

நண்பர் திரு சந்திர சூடன் கோபாலகிருஷ்ணன் அவர்களின் அரிய புகைப்படம் ஒன்று இந்த கலை சங்கிலி கல் சங்கிலி தொடரின் இரண்டாவது பாகம் எழுத தூண்டியது .
173517331737
நாம் முன்னரே காஞ்சியில் பார்த்த சங்கிலிகளை போலவே கன்னட தாளகாடு கோயிலிலும் உண்டு. அங்கே பல சுவாரசியமான தகவல்கள் மற்றும் சிற்பங்கள் உண்டு, எனினும் நாம் இன்று சங்கிலியை மட்டும் பார்ப்போம். இதை வடிப்பது எவ்வளவு கடினம், அதிலும் மேல் தள கல்லில் இருந்து தொங்கும் படி வடிப்பது, அதிலும் வளைந்து நெளிந்து செல்லும் நான்கு தலை படம் எடுக்கும் பாம்பின் ஒரு வளைவிலிருந்து தொங்குமாறு வடிப்பது, அப்பப்பா, அபாரம், அருமை.
1728
ஆனால் நாம் முன்னர் காஞ்சி வரதராஜ சுவாமி கோயில் கலை சங்கிலியை முழுவதுமாய் பார்க்கவில்லை. கல்லில் சங்கிலி அமைக்கும் அபார திறன் படைத்த சிற்பி, தன்னுடைய கலை திறனை நமக்கு காட்ட, அதை இன்னும் கடினமாக்கி, ( தங்க பதக்கம் பெற்ற பின் உலக சாதனைக்கு தாவும் வீரனை போல ) அந்த சங்கிலியின் கடைசி வளைவை எப்படி முடித்துள்ளான் பாருங்கள் – ஒரு பூவின் மொட்டு , அதில் நான்கு கொஞ்சும் கிளிகள் தொங்குமாறு செதுக்கி
1731
….மேலும் வாரத்தைகள் வர வில்லை.

முதலை வாயில் போனது மீண்டும் வெளி வருமா ?

இந்த தூணில் இருக்கும் அரிய சிற்பம் ( ஸ்ரீரங்கம் கோயில் தூண் ) நான் இதுவரை வேறு எங்கும் கண்டதில்லை – இதை விளக்க நாம் ராமயாணதினுள் செல்ல வேண்டும்.

இராவணனின் மகனான மாயை அனைத்தும் அறிந்த இந்த்ரஜித் ஏவிய பானத்தில் வீழ்ந்த இலக்குமணன் உயிர் பிழைக்க சஞ்சிவினி தேவை என்று மருத்துவர் கூற – ஹனுமான் சென்று பர்வதத்தை பெயர்த்து கொணர்ந்தார் என்பது அனைவரும் அறிந்ததே.

ஆனால் அவன் அங்கு செல்லும் காரியம் நிறைவேறாமல் இருக்க ராவணன் தனது மாமன் காலமேணி என்கிற அசுரனை அங்கு அனுப்புகிறான். அவன் அங்கு ஒரு ரிஷி வேடம் பூண்டு, ஹனுமான் வரும் போது அவனை ஆசி புரியும் பாணியில் அருகில் இருக்கும் குளத்தில் நீறாடி விட்டு வருமாறு கூற, அனுமனும் அவ்வாறே அங்கு செல்கிறான் – குளத்தில் கால் வைத்துமே ஒரு பெரிய முதலை அவனை விழுங்கியது – ஹனுமான் அதன் வயிற்றை கிழித்து வெளி வந்தான். அப்போது முதலை மடிந்து ஒரு தேவதை உரு பெற்றது – தக்ஷன் சாபத்தினால் தான் முதலை வடிவம் பெற்றதாகவும் – தன் இயற் பெயர் தண்யமாலி என்றும் – விமோசனம் தந்த ஹனுமனை வணங்கி ஆசிபெற்றால் – உள்ளே இருப்பது ரிஷி அல்ல அசுரன் என்ற உண்மையை அறிந்த ஹனுமான், தன் தலையாய பணி தாமதம் ஆனதால் ஆத்திரம் அடைந்து , அசுரனின் காலை பிடித்து தலைக்கு மேல் சுற்றி விசினான் – அசுரன் அங்கிருந்த இலங்கை ராவணனின் சபையில் வந்து விழுந்து மாண்டான்.

இந்த கதையை தான் இந்த தூண் சிற்பம் விளக்குகிறது – உற்று கவனியுங்கள் – படத்தின் வலது புறம் மேல் பாதி – முனிவர் வேடத்தில் அசுரன் விரல் நீட்டி குளத்தை காட்டும் காட்சி, இடது புறத்தில் ஹனுமான் முதலை வயிற்றை கிழித்து வெளி வரும் காட்சி, அதே காட்சியில் தேவதை ரூபம், வலது புறம் கீழே – பொலி சாமியாரை உதைக்கும் ஹனுமான்..



என்ன அருமையான வேலைப்பாடு, முதலையின் உடம்பின் அமைப்பு, அதில் இருந்து வெளிவரும் அனுமனின் கம்பீர தோரணை – இவை நாம் முன்னர் ஸ்ரீரங்கம் அலசிய குதிரை சவாரி தூண்களில் பின்புறம் என்பதை மனதில் கொண்டு பாருங்கள் (குதிரையின் பின்னங்கால் தெரிகிறது )

இதே போல முதலை வாயில் இருந்த மீண்ட இன்னும் ஒரு கதை உண்டு – அதற்கும் சிற்பம் இருக்கிறது, அவற்றை வரும் மடல்களில் பார்போம்.

உலகிலேய பெரிய புத்தர் சிலை – லேஷான் சீனா

இந்தியாவில் நாம் பல குடவரை கோவில் மற்றும் சிற்பங்கள் கண்டோம். இப்போது சீனா பயணிப்போம்.அங்கு உள்ள லேஷான் என்னும் இடத்தில் உள்ள உலகிலேய பெரிய புத்தர் சிலை சுமார் இருநூற்றி முப்பத்தி மூன்று அடி உயரம் உள்ள சிலை – சிழுஅன் என்னும் மலையை குடைந்த சிலை.
154515301559
153215391557
மைத்ரேய புத்தர் வடிவம் – இவரின் ஒரு கால் நகம் ஒரு மனிதனை விட பெரியது – தலை பத்து அடி அகலம், மூக்கு ஆறு அடி, காதுகள் ஏழு அடி , கண்களின் அழகிய புருவங்கள் ஆறு அடி, மூன்று அடி வாய் , கழுத்து, தோள்கள் இருபத்தி எட்டு அடி, கை விரல்கள் எட்டு அடி. தலை முடியில் உள்ள சுயல்கள் ஆயிரத்தி இருபத்து ஒன்று.

மலையின் முன்னே பாயும் அருவியின் ஆபத்தான சுயல்களில் இருந்து கலங்களை காக்க துறவி ஹைடோங் ஒருவர் AD 713 பணியை ஆரம்பித்தார் – சுமார் ஆண்டு பனி முடிந்தது – பணியின் பொது குடைந்த கற்கள் ஆற்றில் விழுந்து ஆற்றின் சுழல்களை நிற்க செய்தனவாம்
154815551534154115431561
இந்த சிலையின் உன்னதம் அதன் பிரம்மாண்டம் மட்டும் அல்ல, அதில் உள்ள அறிய தொழில் நுட்பம் – மழை நீர் சிலையின் மேல் ஓடி சிதைக்கா வண்ணம், பல கால்வாய்களை சிலையிலே பினைதுள்ளனர் – அதுவும் பார்போர் கண்ணுக்கு பாடாமல். தலை சுருள்களில் விழும் நீர் அங்கே உள்ள கால்வைகளின் மூலம் காது மடல் வழியாக காதில் உள்ள துவாரம் வழியாக சிலையின் பின்புறம் எடுத்து சென்று கிழே கொண்டு செல்ல படுகிறது.அதே போல உடலில் விழும் மழை நீர் புத்தரின் மேலாடையின் முடிவுகளின் மூலம் வடிகிறது. அதனாலே தான் இந்த சிலை இன்றும் நிலைத்து நிற்கிறது.1563

புத்தரின் அமர்த்த கோலத்தை பார்க்கும் பொது – இதே போல எகிப்து மன்னர் ரம்சீஸ் அவர்களது கோவில் – அபு சிம்பெல் என்ற இடம் நினைவிற்கு வருகிறது. அங்கே ஒரு மனிதன் தான் வென்ற நாடு மற்றும் செல்வதினால் தன்னை தானே கடவுள் என்றான் – இங்கோ அனைத்தையும் துறந்து ஒரு மனிதன் கடவுள் ஆனான்.
15261550

கடல் கடந்தும் தன் ஈர்ப்பை செலுத்தும் கலை – நாரத்த மலை

கடல் கடந்தும் தன் ஈர்ப்பை செலுத்தும் கலை – நாரத்த மலை

என்னை பற்றி படிக்கையில் அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் மற்றும் அதனை இன்றும் தினமும் அலசும் எங்கள் யாஹூ குழுமம் பற்றி பார்த்தீர்கள் ( www,ponniyinselvan.in). அந்த குழுமத்தில் எனக்கு கிடைத்த அரிய நட்பு – தமிழ்சரித்திர புதினத்தில் எழும் விவாதங்களில் திடீரென காதேரின் ப்ரோபெக் ( Ms. Katherine Brobeck) என்று ஒரு மடலை இட்ட பெண்மணி யார் என்று தனி மடல் எழுதினேன் – அசந்து போனேன்.

அமெரிக்க பெண்மணியான இவர் பல்லவர், சோழர் , சாளுக்யர் என்று பல அறிய இடங்களை இருபது வருடங்களுக்கும் மேலாக இந்தியாவிருக்கு வருடா வருடம் பயணித்து, நம் கலையை ரசிக்கிறார் என்று அறிந்தேன்.இந்த துறையில் அவர் அறிந்துள்ள விசயங்களை கண்டு வியந்தேன் ! தமிழ் கலையின் மேல் அப்படி ஒரு அலாதி பிரியம் அவருக்கு – தன்னை சிவ தாசி என்று புனை பெயர் சூட்டும் அளவிற்கு சென்றுவிட்டது அவரது பற்று.

அவரை இங்கே ஒரு மடல் எழுத அழைத்தேன் – அவரும் இசைந்து சரித்திர புகழ் பெற்ற நாரத்த மலை – அவர்களது சொந்த பயணத்தின் இடுகை. ( அவருக்கு தமிழ் தெரியாது – அதனால் அவரது ஆங்கில இடுகையை நான் மொழி பெயர்கிறேன் )

J.C.Harle’s “Art & Architecture of the Indian Subcontinent”, புத்தகம் படித்தவுடனே அங்கே செல்லவேண்டும் என்று எனக்கு ஆவல் வந்தது – நாரத்த மலை. புராண கதைகளில் அனுமன் சஞ்சீவனி மலையை இலங்கைக்கு தூக்கி செல்லும் பொது ஒரு பகுதி இங்கே விழுந்ததாகவும் அதனால் இங்கே மூலிகை செடிகள் அதிகம் என்று வழங்கி வருகிறது.

1995 அங்கே முதல் முறை சென்றேன். திருச்சியிலிருந்து ஒரு வண்டி பிடித்து புதுக்கோட்டைக்கு விரைந்தோம், கோயிலை தேடி கண்டுபிடிக்க வேண்டுமே. பெரிய மலையை கண்டு திகைத்தோம், அதற்க்கு அடியில் அழகிய குளம், கோயில் கண்ணுக்கு தென்படவில்லை. தேடி சென்ற பொது அந்த பக்கம் நீரின் மறுபக்கத்தில் ஒரு அய்யனார் கோவில் கண்டோம்.
1583
திடீரென, மரங்களின் நடுவில் இருந்து அற்புதமாக தோன்றியது – விஜயால சோழீஸ்வரம். அருமையான விமானம். தொலைவில் இருந்து பார்கையில் கோயிலின் வடிவமைப்பு உள்ளத்தை கொள்ளை கொண்டது.
1586
முத்தரையர் காலத்தில் ( சோழர்களின் ஆட்சியில் குறிநில மன்னர்கள் ) கட்டப்பட்ட கோயில் (866 CE ) – சிற்பிகள் கட்டுமானம் , சிற்பம் இரண்டிலும் தேர்ச்சி பெற்றவர் என்று நன்கு விளக்கும் இடம் இது. கோபுர சிற்பங்கள் சற்று சிதைந்து இருந்தாலும் எனக்கு தமிழ் கோயில்களில் மிகவும் பிடித்த கோவில் இது.
1588
இங்கே இருக்கும் த்வார பாலகர்கள் மிகவும் அருமை. எங்கும் வரிசை வரிசையாய் யாழி – விளையாடும் யானை மற்றும் யாழிகள் – ஒன்று மனித முகம் கொண்ட யாழி. அங்கும் இங்கும் சிதைந்த சிற்பங்கள் எங்கும் இருந்தன
1591

1609
கோவில் பின்னால் இரண்டு குகைகள் – ஒன்று சேமிப்பு குகையாக உபயோகம் செய்துவருகின்றனர் – மற்றொன்று சமணர் குகை – முதலில் சமணர் குகை, அதன் பின்னர் அதில் அழகிய விஷ்ணு வடிவங்கள் – வரிசையாக எனினும் ஒன்றுக்கொன்று சற்றே மாறுபட்டு இருந்தன. அற்புதமான சிற்பங்கள்.
15961612
கோயிலை சுற்றி ரம்மியமான இயற்கை அழகு, ரசித்தேன். சற்று நேரம் என்னை மறந்தேன்.
15981600
கிழே இறங்கும் பொது இன்னொரு அய்யனார் கோவில் எங்கும் குதிரை உருவங்கள் கண்டு பிரிய மனம் இல்லாமல் பிரிந்தேன்.
1603
காதி ப்ரோபெக்

அழகுக்கு அழகு சேர்க்கும் – சிற்பகலைக்கு மகுடம் சூட்டும் ஓவியம்

சிற்பக்கலை எவ்வாறு நம்மை தாக்குகிறது என்று பல இடுகைகளில் பார்த்தோம். ஆயிரம் ஆண்டுகள் ஆயினும், கால வேகத்தை தாண்டி அந்த கலைஞனின் கலை தாக்கம் அவனது ஜீவனில் இருந்து கல்லினுள் பாய்ந்து , கல்லினுள் இருந்து நமக்குள் பாய்கிறது.


இதை பலரும் உணர்தாலும் சிலருக்கே – அந்த அபூர்வ சக்தி படைத்த ஒரு சிலருக்கே, அந்த உணர்வை வெளி கொணர முடியும். மற்றவருக்கு நம் கண் முன்னே அழகை கண்டவுடன் ரசித்து , நம் அகக்கண் அதை படம் பிடித்து , உள்ளுணர்வை தூண்டி எழுப்பும், ஒரு வித வெளியீட்டை அது தேடும். என் நண்பர் முரளி போன்று கலை திறன் படைத்தவராய் இருந்தீர்கள் என்றால், அந்த உணர்வு, அந்த தாக்கம் , நீங்கள் கண்ட காட்சிக்கு – அழகுக்கு அழகு சேர்க்கும் – சிற்பகலைக்கு மகுடம் சூட்டும் ஓவியம் . பலருக்கு இந்த பாகியம் கிடைப்பதில்லை, எனினும் ரசிக்கும் கண்கள் உள்ளனவே. இரு கலைஞர்களுக்கும் இடையே ஆயிரம் ஆண்டுகள் ஆயினும், உயர்ந்த கலைக்கு என்றும் அழிவில்லை என்று உணர்த்தும் உயிர் சிலை -உயிர் ஓவியம். தஞ்சை பெரிய கோயில் லக்ஷ்மி சிற்பம். ( இதை முதலில் ஞான சரஸ்வதி என்று தவாறாக இட்டு இருந்தேன். பிறகு மேலும் படிக்கையில் இரு கரங்களுடன் இருப்பதால் இது லக்ஷ்மி என்றும், அதே ஆலயத்தில் இருக்கும் நான்கு கரம் கொண்ட சரஸ்வதி சிற்பமும் கண்டு பிழையை சரி செய்துள்ளேன்

சிற்பத்தில் என்ன ஒரு உணர்வு, காலை அழகே மடித்து ஒரு கால் மீது மற்றொன்றை இட்டு அமர்ந்திருக்கும் வண்ணம், அந்த கருணை சொட்டும் கனிவு முகம், வானவில்லை போல வளைத்த புருவம், மந்தகாச புன்னகை, மணி மகுடம், விதவிதமான ஆபரணங்கள், ஆடை அலங்காரம், இதை செதுக்கிய சோழ சிற்பி தன் வாழ்வின் பயனை இந்த படைப்பில் பேற்றான் என்றால் அது நிகை அல்ல. கல்லுக்குள் தன் உயிரை இட்டு அதை உயிர் பித்து என்றும் அழியா வரம் தந்து நம்மை இன்றும் மயக்கும் அவன் கலை திறன் வாழ்க.

வண்ணப்படம் பலவிருந்தும் கருப்பு வெள்ளைக்கு ஒரு தனி மௌசு, படத்தினுள் நம்மை எடுத்து செல்லும் தன்மை.

இதை தன் விரல்களால் வரைந்த ஓவியனுக்கு, பொறாமையாக உள்ளது, இது ஒரு தெய்வீக கலை என்பதை மீண்டும் உணர்த்தி விட்டீர்கள் முரளி. வாழ்க உமது கலை, இது போல இன்னும் பல ஓவியங்கள் தீட்ட எங்கள் நல் ஆசிகள்

முரளி அவர்களின் மற்ற ஓவியங்களை இங்கே காணலாம்.

Tanjore sculpture

மல்லை கடற்கரை கோயில் – ஒரு முதற் பார்வை

Flickr.com நண்பர்கள் திரு பிரபாகரன் ( ஆதி ஆர்ட்ஸ் என்ற பெயரில் அவரது அற்புத புகை படங்கள் ) மற்றும் ரவேஜஸ் என்ற பெயரில் திரு சந்திர சூடன் கோபாலகிருஷ்ணன், நான் உங்கள் அருமையான படங்களை இந்த தளத்தில் இடலாமா என்று கேட்டவுடன், மிகவும் பெருந்தன்மையுடன் – தாராளமாக இடுங்கள் என்று கூறி ஊக்குவித்தனர். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
1570
மல்லை கடற் கரை கோவில் நாம் அனைவரும் அறிந்த ஒன்றே – எனினும் அங்கு இருப்பது மூன்று கோவில்கள் என்று பலருக்கு தெரியாது. சென்னை வாசிகள் அனைவருக்கும் தெரிந்த காட்சி – தொலைவில் இருந்தே இந்த உன்னத கலை கோவிலின் சிகரங்கள் நம்மை ஈர்க்கும். ஆயிரம் ஆண்டுகள் காற்று, மழை, கடலின் சீற்றம் அனைத்தையும் வென்று பல்லவர் கலை போற்றும் ஒரு அற்புத சின்னம். பொதுவாக எந்த ஓவியம், கட்டடம் போன்ற படைப்புகள் / காட்சிகளில் இருபுறமும் ஒரு சமநிலை வேண்டும் என்று வல்லுனர்கள் கற்றுக்கொடுப்பார்கள் – எனினும் இங்கே ஒரு கோபுரம் குட்டையாகவும் மற்றொன்று நெட்டையாகவும் இருந்தும், நம் கண்ணில் அதை அழகாக தெரிய வைத்த சிற்ப திறன் அற்புதம் .
15671576
அது என்ன மூன்று ஆலயங்கள் ? முதலில் இருந்த பெருமாள் சிலையை ஒட்டி இரு சிவன் கோவில்கள் பல்லவ காலத்தில் உரு பெற்றன – ராஜ சிம்ஹ பல்லவன், ஒரு அபூர்வமான அரசன் ( அவன் நிறுவிய சாளுவன்குப்பம் புலி குகை நாம் முன்பே பார்த்தோம் – அங்கு இருக்கும் பாயும் சிங்க தூண்களுடன் கடற்கரை கோவில் சிற்பங்களை ஒப்பிடுங்கள் – அவனது மற்றொரு படைப்பான காஞ்சி கைலாசநாதர் கோவில் சிங்கங்கள் ஒரு பார்வையிலேயே அத்யந்தகாமன் என்ற அவன் முத்திரையை பதிக்கும் – வரும் மடல்களில் இவற்றை காண்போம் )
1574

ஒரு புறம் இருப்பது (நாலு அடுக்கு கோபுரம் ) க்ஷத்ரிய சிம்மேஷ்வரா ஆலயம் – மறு புறம் இருப்பது ( மூன்று அடுக்கு) ராஜசிம்மேஷ்வர ஆலயம்.

இவ்விரு சிவ ஆலயங்களின் நடுவில் பெருமாள் – சோழர் கால கல்வெட்டுகளில் பள்ளி கண்டருலிய தேவர் என்று வழங்கியது.

திருமங்கையாழ்வார் மல்லைக்கு வந்து தலசயன பெருமாளைத் தரிசித்துப் பக்தி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் தமிழ்ப் பாடல்களைப் பாடியிருக்கிறார்

“புலன்கொள் நிதிக்குவை யொடு
புழைக்கை மா களிற்றினமும்
நலங்கொள் நவமணிக் குவையும்
சுமந்தெங்கும் நான் றொசிந்து

கலங்கள் இயங்கும் மல்லைக்
கடல் மல்லைத் தலசயனம்
வலங்கொள் மனத்தா ரவரை
வலங்கொள் என் மட நெஞ்சே!”

15721579

இங்கே வரும் தல சயனம் – இதை வரும் மடல்களில் பார்போம்.