Quantcast

குறிக்கப்பட்ட இடுகைகள் ‘நந்தி’

புதுக்கோட்டை மாவட்டம், இயற்கை கொஞ்சம் எழில் என சொல்லிக்கொள்ள பச்சை ஆடை போர்த்திய வயல்கள் என்றெல்லாம் பெரிதாக ஒன்றும் இல்லை. எங்கும் ஒரே செந்நிறம், அதில் ஒரு பாதை. அதுவும் செந்நிறம் தான். மலையடிப்பட்டி நோக்கி காலை பத்து மணியளவில் சென்றுக்கொண்டிருந்தோம். திடீரென பாதை முடிந்தது. அருகில் சில வீடுகள். ஒரு புளிய மரம் - மரத்தடியில் ஒரு சிறு வால் பையன்கள் கூட்டம் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்தது. அருகில் வயதாலும் நோயாலும் வளைந்து தனது கைத்தடியின் உதவியுடன் ஒரு பெரியவர். சற்று தொலைவில் ஒரு சிறு குன்று, அருகில் ஒரு தடாகம். ஆஹா, இவ்வளவு தொலைவு வெறும் செம்மண்ணையே பார்த்துக்கொண்டு வந்த நமக்கு இப்படி ஒரு ரம்மியமான இடமா ? மகேந்திரர் குடைவரைகள் இருக்கும் இடங்கள் போலவே உள்ளதே என்று மனதில் ஒரு எதிர்பார்ப்பு. ஆம், இங்கே இரண்டு குடைவரைகள் உள்ளன. ஈஸ்வரன் சிவனுக்கு ஒன்று பெருமாளுக்கு ஒன்று. அந்தப் பெரியவர் தான் இந்த இரு குடைவரைகளுக்கும் காவல். மாதத்தில் ஒரு நாள் மட்டுமே கூட்டம் வருமாம். மற்றபடி ஈ காக்கா இல்லை. நம்மை போல யாராவது தெரியாமல் வந்தால்தான் உண்டு. ஆனால் சலிக்காமல் திறந்து காட்டினார். அவரிடம் ‘நாங்கள் நிதானமாய் பார்ப்போம் . ஒரு இரண்டு மூன்று மணி எடுக்கும் !!. என்று சொல்லிவிட்டு ‘போய் சாப்பிட்டு விட்டு வாங்க’ என்று சொல்லிக் கொஞ்சம் பணம் தந்தோம்.அப்போது அவர் பழைய கால் சட்டை இருந்தால் கொடுங்கள் என்றார். ( பதிவை பார்த்துவிட்டு அங்கு செல்லும் நண்பர்கள் ஓரிரு பழைய சட்டைகள் எடுத்துசென்று கொடுங்கள்.புண்ணியமாகப் போகும்!!)

malaiyadipatti
malaiyadipatti+detail

இந்த பதிவில் காலத்தால் முந்தைய - தந்தி வர்ம பல்லவ காலத்து சிவனின் முத்தரையர் குடைவரையை பார்ப்போம் ( அப்படிதான் இருக்க வேண்டும், ஏன் என்றால் அந்த காலத்தில் இந்த பகுதியை ஆண்ட அரசர்கள் முத்தரையர்கள்).

முதலில் உள்ளே இருக்கும் சிற்பாம்சம் - நந்தி.

superlative+nandhi

அப்படி என்ன இந்த நந்தியின் சிறப்பு? நல்ல சிலை தான், எனினும் பல இடங்களில் இதுபோல கலையம்சம் பொருந்திய நந்திகளை நாம் பார்க்கிறோமே. இதன் சிறப்பு அதை செதுக்கிய சிற்பி அதனை ஆயிரம் ஆண்டுகள் அதே இடத்தில இருக்கும் படி செதுக்கியதுதான். என்ன, புரியவில்லையா.

மேலே படியுங்கள்.

முதலில் படத்தை கொஞ்சம் கணினியில் திருத்தி குடைவரை முகப்பு பின்னாளைய கட்டுமானங்களை விளக்கி பார்ப்போம்.

shivacave+closeup
visualisation+of+the+cave+facade+before+thefront+construction

அடுத்து, இன்னும் அருகில் செல்வோம். வெறும் மண்டபம் தான் முதலில் காட்சி தருகிறது.

very+innocuous+entrance

ஆனால் ,உள்ளே சென்று வலது புறம் திரும்பினால் சற்று நேரம் உள்ளே உள்ள இருளுக்கு நம் கண்கள் பழகும் வரை ஒன்றுமே தெரியவில்லை. இன்னும் சிறிது நேரம் கழிந்தவுடன் , ஆஹா என்ன அபாரம்.

the+pallava+cave

ஈசனுக்கு எடுப்பித்த இந்த குடைவரையில் பார்க்க நிறைய உள்ளது. இடது புறம் கருவறை காவலர்கள் காவல் காக்க, அருமையான கருவறை, எதிரில் நமது நந்தி, ஒரு பக்கம் வீரபத்ரர் , விநாயகர் மறுபக்கம் இருக்க அழகிய சப்த மாத்ரிகா வடிவங்கள், இன்னொரு பக்கம் துர்க்கை, பெருமாள் என்று ….வரும் பதிவுகளில் பார்ப்போம்.

mainshrine+flanked+by+doorguardians

படத்தின் வலது புறத்தில் நமது நந்தி தெரிகிறதா? மீண்டும் கணினி கொண்டு தூண்களை விளக்கிவிடுவோம்.

the+pallava+cave
digitally+removed+central+pillar
digitally+removed+pillar+add+mock+nandhi+front

இப்போது புரிகிறதா. நந்தி, நந்திமேடை - அனைத்தும் ஒரே கல் - அதுவும் தாய்பாறையில் செதுக்கியது. அந்த நாளில் இருந்த திறமை, ஒரு மலைப்பாறையை இப்படி குடைய, அதுவும் துளி கூட தவறுக்கே இடம் இல்லாத இடத்தில இப்படி ஒரு கடினமான சிலையை செதுக்க முயற்சிக்கும் தைரியம், அவன் திறமையில் அவனுக்கு இருக்கும் நம்பிக்கை - நம்மை பிரமிக்க வைக்கிறது.

இப்போது புரிகிறதா - இந்த நந்திக்கு ஏன் தனிச்சிறப்பு என்று

nandhi+in+allhis+splendor

மறுமொழி அளிக்கவும் »


நண்பர்களே, இந்த தளத்தில் சிற்பக்கலை பற்றி சாட் உரையாடல்களை நடை பெற நண்பர் ‘திரு’ அவர்கள் அமைத்துக்கொடுத்தது எதற்காக என்றால், அது பின்னூட்டம் விட தயங்கும் நண்பர்கள் தங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர உதவும் என்பதாலேயே அமைத்தோம். அதன் படி ஒரு உரையாடலை இங்கு உங்கள் பார்வைக்கு ஒரு பதிவாக மாற்றி இடுகிறேன்.

நண்பர் பெயரை வெளியிடவில்லை.

நண்பர்: உங்கள் முந்தைய பதிவின் ஒன்றில் இருந்து சோமநாதபுரம் பற்றி இன்னுமொரு தளத்திற்கு சென்றேன்

http://bp0.blogger.com/_xUJrI6cswLg/SF_jI-vYY3I/AAAAAAAAAQQ/UKpNmgOUwAY/s1600-h/DSC07354.JPG

vj: மன்னிக்கவும் , எந்த பதிவு , மற்றும் நான் யாருடன் உரையாடுகிறேன் என்று முதலில் சொல்லுங்கள்

நண்பர்: நான் @@@@@ , சிற்பக்கலை பற்றி @@@@@@ இல படிக்கிறேன். ஹனுமான் பாண லிங்கம் சிற்பம் , சோமனாத்பூர்

vj: ஓ, அப்படியா. மிக்க மகிழ்ச்சி.அந்த பதிவா ! நண்பர் திரு ஆனந்த் அவர்களது பதிவு.

Hanuman somnathpur with vishnu attributes and bana lingam


சிற்பத்தில் ஹனுமான் பாண லிங்கத்தை ஏந்தி நிற்கும் காட்சி. ராமபிரான் ஹனுமனை கைலையில் இருந்து சிவனின் லிங்கத்தை எடுத்து வருமாறு கூறுகிறார்.( ராமேஸ்வரத்தில் இராவணனை கொன்றதனால் பெற்ற ப்ரஹ்ம்மஹத்தி தோஷம் விலக பூஜை செய்ய). ஹனுமான் வர தாமதம் ஆனதால், ராமபிரானும் சீதாபிராட்டியும் மணலில் லிங்கம் பிடித்து பூஜையை ஆரம்பித்துவிட்டனர். இதை கண்டு வருத்தம் அடைந்த ஹனுமனை சமாதானம் செய்ய, அவருக்கு ஒரு வரம் அளித்தார் - ராமர். இனி அங்கு பக்தர்கள் முதலில் ஹனுமனின் பாண லிங்கத்தை வழிபட்ட பின்னரே தனது லிங்கத்தை வழிபடவேண்டும் என - இன்றுவரை அப்படியே ராமேஸ்வரத்தில் இரண்டு லிங்கங்கங்கள் உள்ளன “

நண்பர்: ஆனால் எங்கள் ஆசிரியரின் கூற்றுப் படி, இந்த சிற்பம் இன்றும் ஒரு புதிராகவே உள்ளதாமே?

vj: அப்படியா, இந்த சிற்பம் ஹனுமான் என்பதில் குழுப்பமா அல்லது அவர் கையில் வைத்திருக்கும் பாண லிங்கத்தில் சர்ச்சையும் குழப்பமுமா? சிற்பத்தை இன்னும் ஒரு முறை அருகில் சென்று பார்ப்போமே ( நன்றி திரு அர்விந்த் படங்களுக்கு )

bana lingam
face of hanuman

நண்பர்: அதுவா, சர்ச்சை அவர் கையில் வைத்திருக்கும் சங்கு மற்றும் சக்கர ஆயுதங்களால் என்று நினைக்கிறேன்.

closeup of hanuman
left hand holding the conch
right hand holding the discus

vj: அப்படியா, இதில் ஒன்றும் வினோதம் தெரியவில்லையே.

நண்பர்: அப்படியா

vj: சரி, ஒரு கேள்வி கேட்கிறேன். சென்னை எழும்பூர் அருங்காட்சியகம் வெண்கல சிலைகள் அணிவகுப்பு பார்த்ததுண்டா

நண்பர்: இல்லை, அடுத்து நாங்கள் அதை தான் படிக்க போகிறோம்.

vj: சரி, இப்போதைக்கு இந்த படத்தை பாருங்கள்( நன்றி ஃபிலிக்கர் நண்பர் )

http://farm3.static.flickr.com/2063/2410943558_f9be866992.jpg?v=0

nandhi chennai museum bronze sporting shiva attributes

நண்பர்: நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று கொஞ்சம் புரிவது போல் உள்ளது

vj: அப்படியா, இது நந்தி - ஈசனின் மான் மழு ஏந்தி நிற்கும் சிலை. சரி, இப்போது உங்களை இன்னும் கொஞ்சம் குழப்புகிறேன். இந்த சிற்பத்தை பாருங்கள். தஞ்சை பெரிய கோயில் சிற்பம். ( படங்களுக்கு நன்றி அர்விந்த் )

hanuman in big temple sporting shiva attributes

நண்பர்: அய்யோ , இது இன்னும் குழப்புகிறதே !

vj: இதில் என்ன குழப்பம், ஹனுமான் இங்கே ஈசனின் மான் மழு ஏந்தி நிற்கிறார்!!

நண்பர்: ஒரு கேள்வி கேட்டதற்கு இப்படியா ?

vj: அப்படி இல்லை, முதலில் சோமநாதபுரம் சிற்பம் ஹனுமான் தான். பாண லிங்கம் கதை மிகவும் தொன்மை வாய்ந்த கதை. அதனுள் இப்போது செல்லவில்லை. மேலும் சிவ-விஷ்ணு வாகனங்கள் தங்கள் எஜமானர்களின் ஆயுதங்களை தாங்கி நிற்கும் என்பதற்கு அந்த நந்தி ஒரு அத்தாட்சி. ஹனுமான் ஈசனின் அவதாரம் என்று பல இடங்களில் பாடல்கள் உள்ளன. அதனை குறிப்பதே இந்த தஞ்சை சிற்பம்.

நண்பர்: சரி, இதை எங்கள் ஆசிரியரிடம் சொல்லிப்பார்க்கிறேன்.
vj: நன்றி, எனினும் நாங்கள் சாமானியர்கள், முறையாக சிற்பம், கலை பயின்றவர்கள் அல்ல. ஏதோ எங்களுக்கு கிடைத்தவற்றை, படித்த நூல்களை கொண்டு விளக்குகிறோம். இதை வைத்து தங்கள் ஆசிரியருடன் பிரச்சினையில் மாட்டிக்கொள்ளாதீர் ??

மறுமொழி அளிக்கவும் »

 Page 1 of 4  1  2  3  4 »