Quantcast

குறிக்கப்பட்ட இடுகைகள் ‘ஹனுமான்’

தூண் சிற்பங்கள் என்றாலே ஒரு தனி அழகு தான் - அதுவும் கதை சொல்லும் தூண்கள் என்றால் கேட்கவே வேண்டாம். பல புராண கதைகள் இன்று நாம் மறந்தே பொய் விட்டோம். அதனால் பல சிற்பங்களை அவற்றின் கதையை அறிந்து ரசிக்க முடிவதில்லை. இதுபோல மறந்த கதையை சொல்லும் பேரூர் தூண் சிற்பத்தை இன்று நாம் பார்க்கிறோம்.

கடைகள் மறைத்து நிற்கும் இந்த தூணைத் தேடி செல்ல வேண்டும். இல்லையேல் அகப்படாது. நமக்கென்று உதவ பிரிட்டிஷ் பட களஞ்சியம் உள்ளது.

spot+hanuman

கண்டுபிடிக்க இயலவில்லையா. இதோ

spot+hanuman+now

கனக சபை படிகளை கொண்டு தூண் எங்கே உள்ளது என்பதை தெரிந்துக்கொள்ளலாம். இன்றோ கடைகளுக்கு நடுவில் கயிறு கட்டி…

perur+pillar+hanuman

எனினும் இந்த உடைந்த தூண் கண்ணில் பட்டது.

the+broken+pillar

ஏன் என்று தெரிகிறதா.

closeup+of+the+brokenpillar+hanuman

ஓவியர் பத்மவாசன் அவர்களுடன் பேசும்போது, தான் அந்த தூணை கூட வரைந்து வைத்துள்ளேன் என்றார். இதோ அவரது ஓவியம்.

sketch+artist+padmavasan

சரி, இது என்ன கதை? முழு கதையை ஸ்ரீரங்கம் சேஷ ராயார் மண்டப தூணில் பார்த்தோம். படிக்க இங்கே சொடுக்கவும்.

முதலை வாயில் சென்றது மீளுமா ?

இந்த தூண் எப்படி உடைந்தது. இப்போது நாம் பார்ப்பது மாற்று தூணோ ?

மறுமொழி அளிக்கவும் »

சென்ற மடலின் தாக்கம் அப்பப்பா , கார சார விவாதம் நடைபெறுகிறது. அதன் இரண்டாம் பாகம். மீண்டும் ஒருமுறை சர்ச்சைக்கு உரிய சிற்பத்தை பார்ப்போமே.

Hanuman somnathpur with vishnu attributes and bana lingam
bana lingam
closeup of hanuman
face of hanuman
left hand holding the conch
right hand holding the discus

இது ஹனுமான் பாண லிங்கத்தை கொண்டு வந்ததை குறிக்கிறதா?.

ஆம் என்பதற்கு

ராமேஸ்வரம் தல புராணம், சிற்பத்தின் முக தோற்றங்கள்.

இல்லை என்பதற்கு

ஹனுமனின் வால் எங்கே , அருகில் இருக்கும் இரு மாந்தர்கள் யார், சங்கு மற்றும் சக்கரம் எதற்கு ( இதை விளக்க சீனு அவர்களது நல்ல வாதங்கள் )

சரி, இது வேறென்ன சிற்பமாக இருக்கலாம்.

மச்ச அவதாரமாக இருக்குமோ

ஆனால் அங்கேயே மச்ச அவதார சிற்பமும் உள்ளதே.

somnathpur1
Somnathpur - Matsya

இதை பற்றயும் நாம் விவாதம் செய்தோம், முடிவில் சிற்பத்தின் கண்களை கொண்டு இந்த சிற்பம் மச்ச அவதாரம் என்ற முறையில் எடுத்துக்கொண்டோம்.

மீண்டும் ஒருமுறை அருகில் சென்று அதையும் பார்ப்போம் ( நன்றி அர்விந்த் )

face of fish, notice the eyes
macha avatar closeup

இந்த சிற்பத்தையும் முந்தைய சிற்பத்யும் ஒப்பிடுபோது இரண்டும் கண்டிப்பாக ஒரே உருவம் இல்லை என்று தான் கூறவேண்டும்

வராஹ அவதாரமாக இருக்குமோ

இருக்கலாம். எனினும் வராஹம் முக தோற்றம் வேறு விதமாக இருக்குமே. ( இந்த அஹோபிலம் சிற்பத்தை பாருங்கள் )

ahobilam varaha side
ahobilam varaham

புவியை உருண்டையாக இந்த சிற்பத்தின் காலத்தில் காட்ட வில்லை (புவி உருண்டை என்பது அந்தக் காலத்திலேயே நம் முன்னோர்கள் சொல்லிவிட்டார்கள் என்பது வேறு விஷயம்), அப்படியே இருந்தாலும் சங்கையும் சக்கரத்தையும் அற்புதமாக வடித்த சிற்பி அதை மட்டும் முட்டையை போல வடிவத்தில் ஏன் வடித்தான் என்பது சரியாக வரவில்லை.

bana lingam
left hand holding the conch
right hand holding the discus

அருகில் இருக்கும் இரு மாந்தர், பொதுவாக எல்லா சிற்பங்களிலும் அவர்கள் வருவர் போல உள்ளது. இதோ இந்த ப்ரஹ்மா சிற்பம் பாருங்கள்.

brahma somnathpur

சரி, அடுத்து இன்னும் ஒரு சிற்பம் நம் ஆய்வுக்கு - கூர்ம அவதாரம்.

Somnathpur - could be kurma

அருகில் சென்று பார்ப்போம்.

Kurma avatar
kurma avatar closeup
kurma face

கச்சபேசுவரர் வடிவில் சைவ ஆகமங்களில் இந்த கதை வந்தாலும் - ஒருமுறை சிற்பத்தை ஒப்பிடுவோம்.

face comparison

எதுவுமே பொருந்தவில்லையே. இதனால் எனது கணிப்பு ஹனுமனையே ஒட்டி செல்கிறது. ( கண்டிப்பாக கண்கள் முக்கிய ஆவணம் )

சிதைவடைந்த சிற்பங்கள் பல நேரங்களில் நம்மை குழப்புவது உண்டு. அது போல இதோ ஒரு சிற்பம்.

another mystery image

யாரப்பா , இது என்ன சிற்பம் என்று சொல்லுங்களேன். உடல் கணபதி , தலை ??

அருகில் செல்வோம்.

closeup of mystery image showing all atrributes of ganesha

ரொம்ப குழம்ப வேண்டாம். இது ஒன்றும் நவீன கணபதி அல்ல. அருகில் சென்று தடயங்களை தேடுங்கள்.

its our Ganesha only

மேலே - இடது புறம் பாருங்கள்.

the piece of the trunk holding a modhakam

உடைந்த துதிக்கையின் மிச்சம் - அவனுக்கு பிடித்த மோதகத்தை இன்னும் பிடித்துள்ளதே . இது நமது கணபதி தான்.

மறுமொழி அளிக்கவும் »

 Page 1 of 3  1  2  3 »