Quantcast

இப்போது நாம் இந்த அருமையான சிறப்ப தூண்களின் அடியில் இருக்கும் சிற்பங்களை பார்போம்…. மூர்த்தி சிறியது என்றாலும் கீர்த்தி பெரியது என்பதற்கு சான்று போல ….. சிறிய இடத்தில் என்ன என்ன வடிவங்களை சித்தரிக்கிறான் பாருங்கள்…

srirangam intricate sculpture master 2.JPG
srirangam intricate sculpture master.JPG

 

முதல் இரண்டு படங்கள் - இந்த சிறு சிற்பங்கள் இருக்கும் இடத்தை விளக்கும் உற்று பாருங்கள்.. இவை அனைத்தும் ஒரே கல் என்பது நினைவில் வைத்து மீண்டும் பாருங்கள்…

நாம் பெரும்பாலும் கோவில் தூண்களில் பார்க்கும் யாழி ( கீழே இருக்கும் யானையின் துதிக்கையை மேல் நின்று பிடிக்கும் யாழி ….) இங்கே தூணிற்குள் இருக்கும் சிறு சிற்பத்தில் வரும் காட்சியுனுள் புகுத்தி உள்ளனர்… நடுவில் ஓய்யாரமாய் இடையில் கைவைத்து நிற்கும் பாவை…

pillar details4.jpg
ram+lak+hanuman+garuda.jpg

 

ஆஹா…..நாய் குட்டி போல துள்ளி வரும் கஜேந்திரனை அன்போடு அணைக்கும் பெருமாள். வாய் பொத்தி ராமனின் உபதேசத்தை பெரும் ஹனுமன். மிக நேர்த்தியாக யானை மேல் அமர்ந்திருக்கும் விஷ்ணு. அவருக்கு மேலே இருக்கும் தோரணத்தில் தான் என்ன ஒரு வேலை பாடு.

what style.jpg
vishnu+gajendran.jpg
ram+ hanuman.jpg
vishnu on elephant.jpg

 

பறக்கும் கருடனின் மேல் சங்கு சக்ரதாரி. அந்த காட்சியை கருடனை போலவே பெருமாளை தூக்கும் ஹனுமன்…( அப்போதும் பாதங்களை பிடித்திருக்கும் கோலம் அருமை ). அரியணையில் அதிகார தோரணையில் அமர்ந்திருக்கும் அவனின் கால் படியும் ஹனுமான். லக்ஷ்மியுடன் பெருமாள்…

mahavishnu on gardua.jpg
vishnu on hanuman.jpg
vishnu + hanuman.jpg
vishnu+lakshmi.jpg

 

ram+lak+hanuman+garuda.jpg

சரி இது என்ன -எதோ பட்டாபிஷேகம் போல உள்ளது -ஒரு புறம் ஹனுமனும் மற்றொரு புறம் கருடனும் கலசத்தை எடுத்து வர… பவ்யமாய் கை கூப்பி நிற்கும் லக்ஷ்மணன்

 

 

இது என்ன - பாற்கடல் கடையும் காட்சி….கீழே இடம் இல்லை என்பதால் - பெருமாளை கூர்மமாக காட்டாமல் தனது இரு கரங்களால் மத்து ( மலையை )தூக்கி பிடித்துள்ளார்….ஆனால் அது என்ன இரு குரங்குகள்.?? சரி இது யார்…தோளில் ஒரு மான் குட்டி,,,காலுக்கு ஒருபுறம் ஒரு நாய் குட்டி…அந்த புறம் ஒரு பெண் ..காலில் முள் தைத்ததோ….பெரும்பாலும் நம் படங்களில் வருவதை காட்டிலும் இங்கே மாறுகிறதே…

paarkadal but why 2 monkeys.jpg
who is this.jpg

மேலும் பல சண்டை பயிற்சி காட்சிகள் ..மொத்தத்தில் ஒவ்வொரு தூணும் ஒரு கலை பெட்டகம்..

pillar details.jpg
pillar details4.jpg

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , , , , ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 31st, 2008 அன்று 11:17 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் மற்றதை விடுத்து இறுதிக்குச் சென்று ஒரு பதிலிடலாம். பிங் செய்வது தற்போது தடை செய்ய்ப்பட்டிருக்கிறது.

இதுவரை 2 மறுமொழிகள்

  1  

Very nice series of articles explaining the pillars. I have seen very similar pillars in the Vellore Temple Kalyana Mantapam (Marriage hall) and this article brings even more details for my understanding.

செப்டம்பர் 22nd, 2008 at 11:17
  2  

’யானை மேல் விஷ்ணு’ - தவறு

கஜேந்திரனைக் காக்கும் விஷ்ணு.

தேவ்

அக்டோபர் 17th, 2008 at 22:04

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி