சிறப்பு விருந்தினர் அரவிந்த் படைக்கும் சிறப்பு விருந்து. பலரும் செல்லும் காஞ்சியில் ஒளிந்து இருக்கும் பொக்கிஷம். நண்பர் அரவிந்த் சிலை சிற்பங்கள் மேல் தீராக் காதல் கொண்டவர். சிற்பம் பற்றி பல நல்ல புத்தங்களை சேகரித்து, அவற்றை பல முறை ஆழ்ந்து படித்து, அதன் பின்னர் அங்கு சென்று மீண்டும் மீண்டும் ரசித்து ஆராய்பவர். மேலே படியுங்கள் - இனி ஓவர் டு அரவிந்த்

காஞ்சிபுரம் செல்ல வேண்டும் என்பது நான் பல நாட்களாக செய்யவேண்டும் என்று குறித்து வைத்த ஒன்று. பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின்போது பலமுறை சென்றிருந்தாலும், சமீப காலத்தில் இந்த புதையல்களின் குவியலை சென்று பார்க்கவில்லையே என்ற ஒரு குறை வெகு நாட்களாக இருந்தது.

காஞ்சிபுரம் செல்ல வேண்டும் என்பது நான் பல நாட்களாக செய்யவேண்டும் என்று குறித்து வைத்த ஒன்று. பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின்போது பலமுறை சென்றிருந்தாலும், சமீப காலத்தில் இந்த புதையல்களின் குவியலை சென்று பார்க்கவில்லையே என்ற ஒரு குறை வெகு நாட்களாக இருந்தது.

ஒரு நண்பருடன் பேசும்போது, ஆர்வம் மீண்டும் எழுந்தது. கடைசியில், சென்ற வாரம், இப்போதே போக வேண்டும் என்று முடிவெடுத்து - அதுவும் அது ஒரு முழு வாரக் கடைசி - இரண்டு நாட்கள் ஒதுக்கி வைத்து - முடிந்தவரையிலும் அனைத்து இடங்களை இம்முறை பார்த்துவிட வேண்டும் என்ற வைராக்கியத்துடன் புறப்பட்டேன். நண்பர் கோபிநாத ஸ்ரீநிவாஸ் அவரும் உடனே வருகிறேன் என்று சேர்ந்துக்கொண்டார்.

ஒவ்வொரு ஆலயமாக செல்லச் செல்ல, சிற்பங்களின் போதை ஏறியது, வெய்யில் அதிகம் - என்றாலும் முதல் நாள் கைலாசநாதர், கச்சபேஸ்வரர், காமாட்சி அம்மன் , உலகளந்த பெருமாள் என்று சனிக்கிழமை வந்தது தெரியாமல் ஓடியே போய் விட்டது.

அடுத்த நாள் விடியற் காலையிலேயே புறப்பட்டு விட்டோம். மதியம் நடைசாத்தும் முன்னர் முடிந்த வரையிலும் முடிக்க வேண்டும் . ஏகாம்பரேஸ்வரர் தரிசனத்தை முடித்துவிட்டு வைகுண்ட பெருமாள் கோயில் விரைந்தோம். ஏகாம்பரேஸ்வரர் கோயில் வெளியேஇருந்து பார்த்த பிரம்மாண்டத்திற்கு உள்ளே சிற்பங்கள் அப்படி ஒன்றும் விசேஷமாக இல்லை. ஆனால் வைகுண்ட பெருமாளோ …அப்பாடா - நகர முடியவில்லை - ஒவ்வொரு துணுக்கும் ஏராளமான சிலை, அவை சொல்லும் கதை. ஒரு இடத்தில ஹோங் சென், மல்லை கடற்கரை கோயில், பல்லவ மன்னர்கள் அரியணை ஏறும் வைபவம் என்று எங்கே பார்த்தாலும் சிற்பக் குவியல். அப்போது கோவில் பூசாரி பக்கத்தில் இன்னும் ஒரு நல்ல கோயில் இருக்கிறது - போய்ப் பாருங்கள் என்றார்.

வைகுண்ட பெருமாள் கோயிலில் இருந்து ஒரு இருநூறு மீட்டர் தூரம் தான் . ஆனால் அதை கண்டுபிடிப்பது சுலபம் இல்லை.

strange+surroundings

பூசாரி - இரண்டாவது வலது ரோட்டில் திரும்ப சொன்னார் - திரும்பியவுடன் கோபுரம் தெரிந்தது. ஆஹா என்று, சென்று பார்த்தால் - உள்ளே செல்லும் வழி தெரியவில்லை. எல்லா பக்கமும் நவீன வீடுகள். திரும்ப ஒருமுறை வந்த வழியே வந்து பார்த்தோம். ஆ , இதோ ஒரு சிறு பாதை. முப்பது அடி உள்ளே - அருமையான கோயில். பல்லவர் கட்டிய சிறு ஆலயம் தான் - மொத்தமே நாலாயிரம் சதுர அடி தான் இருக்கும். எதிரே ஒரு சிறு நந்தி, பக்கத்தில் ஒரு அரச மரம் ( அதுக்கு நல்ல கூட்டம் போல தெரிகிறது )

mathangeshwara kanchi
nandhi+sacred+tree
nandhi

தரையில் இருந்து பத்து படி ஏறினால் மண்டபம்

mathangeshwara

உள்ளே - லிங்கம் - அதன் பின்னர் அற்புத சோமஸ்கந்தர் வடிவம். இது எந்த பாணியில் உள்ளது? பார்த்து சொல்லுங்கள்

somaskanda+mathangeswara
the+main+shrine

இந்த ஆலயத்தின் உள்பக்க சுவரிலும், வெளி பிரகாரத்திலும் இன்னும் மிக அற்புத சிற்பங்கள் உள்ளன. இவற்றின் அழகை முழுவதுமாக ரசிக்க மீண்டும் ஒரு முறை வர வேண்டும்.

அற்புத சிற்பங்களையும் இந்த ஆலயத்தின் வரலாற்றையும் பற்றி - தொடரும் அடுத்த பாகத்தில் பார்ப்போம்.

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , , , , , ,

தொடர்புடைய இடுகைகள்:

“அலைகளையும்,கொழுந்து விட்டெரியும் அழலையும்,காற்றின் போக்கில் விண்ணில் தவழ்ந்து செல்லும் வெண்முகிலின் கூட்டத்தையும் தூரிகையால் ஓவியமாக வடிக்க வல்லவனே மிகச் சிறந்த ஓவியன்.”

விஷ்ணு தர்மோத்தர புராணம், Ch 43 V 28

நான் இதனை முதல் முறையாக திரு.சிவராமகிருஷ்ணன், சென்னை அரசு ஓவியக் கல்லூரி ஆசிரியர் , அவர்களின் உரையில் ( அதற்கு அழைப்பு விடுத்த திரு. சுவாமிநாதன் அவர்களுக்கு நன்றி ) கேட்டேன். உரையின் தொடக்கத்திலேயே மேல்கண்ட அந்த அற்புத வாக்கியத்தைச் சொல்லி எங்கள் ஆர்வத்தைத் தூண்டினார் சிவராமகிருஷ்ணன்.

”ஓர் ஓவியனின் பார்வையில் சிற்பம்” என்பதே உரையின் தலைப்பு - பல அற்புதமான சிற்ப வடிவங்களில் பொதிந்து கிடக்கும் கலை நுட்பங்களை அவர் எங்களுக்கு விளக்கினார். எனினும் என்னை மிகவும் கவர்ந்தது முடிவில் அவர் விளக்க எடுத்துக்கொண்ட ‘அஜந்தாவின் அழியா ஓவியங்கள்’ தலைப்பு (சிவகாமியின் சபதம் - ஆயனச் சிற்பியின் தாக்கம்தான்!!)

நண்பர்கள் பலரும் அஜந்தா சென்று அங்குள்ள அழியா ஓவியங்களைப் பார்த்துவிட்டுப் புளகாங்கிதம் அடைவதைக் கண்டதுண்டு. எனினும் அவர்கள் அவற்றை முழுமையாகப் புரிந்து கொண்டு அப்படிப் பரவசப் படுகிறார்களா என்று ஒரு கேள்வி மனத்தில் இருந்தது. இங்கேதான் நுண்கலை வல்லுனர்களின் உதவி நம்மைப் போன்ற சாமானியர்களுக்குத் தேவை (இந்தப் பதிவை இட அனுமதி அளித்த திரு. சிவராமகிருஷ்ணன் அவர்களுக்கு மற்றுமொரு முறை நன்றி - இப்பதிவில் உள்ள நல்ல அம்சங்கள் எல்லாம் அவருடையவை; பிழைகள் ஏதேனும் இருந்தால் அவை எனது மட்டுமே )

long shot of the mural

இப்படித்தான் பொதுவாக அஜந்தா செல்லும் அனைவரும் அங்கிருக்கும் ஓவியங்களைப் பார்க்கின்றனர். சிதைந்து போனாலும் அதில் எஞ்சி இருக்கும் கலையை நாம் உன்னித்துப் பார்த்தால் மேலும் மேலும் ரசிக்கலாம். படத்தின் வலப்புறம் பாருங்கள்.

long shot of the mural with the apsara

இது அஜந்தாவின் பதினேழாம் குடைவரையில் இருக்கும் சுவர் ஓவியம். வானுலக தேவதை புத்தரை வழிபட பூலோகம் இறங்கி வரும் காட்சி இது -

அருகில் சென்று ஓவியத்தின் அழகை ரசிப்போம்.

closeup of the mural

பேரழகுதான் - பொறுங்கள், அதற்குள் ’பேஷ் பேஷ்’ எல்லாம் வேண்டாம். இந்த ஓவியத்தின் நுட்பங்களை முதலில் பார்ப்போம்.

அதற்கும் முன்னர், நண்பர் ஓவியர் திரு பிரசாத் அவர்களை கட கடவென்று இந்த ஓவியத்தின் நகல் ஒன்றை வரைந்து தரச் சொன்னேன். இதோ அது -

prasad's rendition

ஒவ்வொன்றாக இந்த ஓவியத்தின் உன்னதங்களைப் பார்ப்போம்.

முதலில் - விஷ்ணு தர்மோத்தரத்தின் சித்ர ஸூத்ரம் பகுதியில் இடம்பெற்ற இன்னும் ஒரு வாக்கியத்தைப் பார்ர்ப்போம் ( விஷ்ணு தர்மோத்தரம், *அபிலாஷ்தார்த்த சிந்தாமணி,* சிவதத்வ ரத்நாகரம், சில்ப ரத்நம், நாரத சில்பம், ஸரஸ்வதி சில்பம், ப்ரஜாபதி சில்பம் முதலியவை சித்திரங்கள் பற்றித் தெரிவிக்கும் நூல்களில் குறிப்பிடத் தக்கவையாகும். இந்நூல்கள் ஓவியத்தின் தன்மை, வகைகள், செயல்முறை, வண்ணங்கள், துணைக் கருவிகள், மூலப் பொருட்கள், நற்பண்புகள், குறைகள், நடைமுறை, திறனாய்வு மரபுகள் பற்றிக் கூறுகின்றன. விஷ்ணு தர்மோத்திரத்திலுள்ள ’சித்ர ஸூத்ரம்’ என்று அழைக்கப்படும் பகுதியே பண்டைய ஓவியக் கலை நுட்பம் பற்றித் தெரிவிக்கும் தலைசிறந்த பகுதியாகும். )

// ரேகாம் ப்ரசம்ஸந்தி ஆசார்யா:, வர்ணாத்யாம் இதரே ஜநா://

என்றால் ” வல்லுனர்கள் ஓர் ஓவியத்தைக் கோடுகளை கொண்டே மதிப்பிடுவர்”

நாம் எல்லோருமே ஒருமுறையாவது வர்ணங்களைக் கொண்டு ஓவியம் தீட்ட முயற்சி செய்திருப்போம் ( சிறு வயதிலாவது !!). சிலர் முறையாகப் பயின்றும் இருப்பார். அப்படி நாம் தீட்டும்போது வர்ணத்தில் தோய்த்த தூரிகையை அப்படியே கையை எடுக்காமல் ஒரே மூச்சில் கோடுகளை வரைவது எவ்வளவு சிரமம் என்று அறிவோம். ஆனால் அதுதான் கைதேர்ந்த ஓவியனின் திறமை. இப்போது இந்த அஜந்தா ஓவியத்தின் கண்களையும் புருவத்தையும் பாருங்கள் - ஒரே இழுப்பில் வரையப்பட்ட அழகு - ஒரே இழுப்பு தான் - புருவம் வந்து விட்டது; அடுத்த இழுப்பு கண்களில் தோற்றம்.

eyes and the eye brows

அவை வெறும் நேர் கோடுகளும் அல்ல; அந்த வளைவுகளுக்குள் ஒரு நயம் உள்ளது. அந்தச் சிறு நெளிவில் கடைக்கண்ணின் தோற்றத்தின் உயிர்ப்பு மிக்க வெளிப்பாடு. அப்பப்பா ! இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

இன்னொரு வாக்கியம் -

// அபி லகு லிகிதேயம் த்ருச்யதே பூர்ணமூர்த்தி: //

அப்படியென்றால் “முழு உருவத்தையும் வெகு சில கோடுகளைக் கொண்டு உணர்த்த வேண்டும் “

சரி, சம கால ஓவிய முறைகள் அஜந்தாவில் உள்ளனவா? பொதுவாக முப்பரிமாண உருவங்களை இரண்டு பரிமாணத்தில் காட்டுவதே ஓவியம். ஆனால் பார்ப்போருக்கு அது முப்பரிமாணத்தை உணர்த்த வேண்டும்.

இதற்கு எடுத்துக்காட்டாக ஓவியத்தில் உள்ள இரு காதணிகளையும் பாருங்கள்.

the ear rings

இடப்புறக் காதணி - வெறும் இரு நேர் கோடுகள் மட்டுமே கொண்டு தீட்டப்பட்டுள்ளது. அடியில் சற்றே வளைந்த கோடு. ஆனால் இதை வலது தோட்டுடன் ஒப்பிட்டுக் காணும் பொது. இது வட்டமான காதணி தான். எனினும் அங்கேயும் அது வட்டமாக இல்லை – Oval shapeல் இருந்தாலும் அந்த வடிவமைப்பு நமக்கு இரு காதணிகளின் வட்டமான தோற்றத்தை இடைவெளியுடன் முப்பரிமாணத்தில் உணர்த்தும் வகையில் உள்ளது - நமது பார்வையுடன் விளையாடுவதே இதன் நோக்கம்.

முதன்முதலில் சொன்ன வாக்கியத்தில் வற்புறுத்தப்படும் அசைவு -இதுவும் ஓர் ஓவிய முறை - பொருட்களின் அசைவை உயிரோட்டத்துடன் சித்திரிப்பதே ஓவியத்துக்கான இலக்கணம்.

இந்த ஓவியத்தில் உள்ள நிகழ்வு - இறங்கும் தேவதை திடீரென நின்று அருகில் இருப்பவரைப் பார்க்கிறாள். அவள் முகம் சற்றே இடது புறம் திரும்ப ஆரம்பிக்கிறது - கண்கள் இவற்றை முந்திக் கொண்டு விட்டன - கடைசியில் அவள் அணிந்திருக்கும் அணிகலன்கள் - திடீரென நின்று பாருங்கள் - அந்த திடீர் அசைவுக்கு ஈடு கொடுக்க அவை குலுங்கும் வண்ணம் வடித்த ஓவியனின் திறன்…

sway of jewellery
the sway of the jewellery

இது போல இன்னும் பல திறமைகளை இங்கு வெளிக்காட்டுகிறான் ஓவியன். அண்மையில் இருக்கும் பொருட்களைப் பெரிதாகவும் , தொலைவில் இருக்கும் பொருட்களைச் சிறியதாகவும் பார்க்கும் நமது மூளையை - இரு பரிமாணத்தில் இருக்கும் ஓவியத்தை முப்பரிமாணம் என்று நினைக்க வைக்க - அவன் அதை ஓவிய முறையில் கையாளும் உத்தி : கழுத்தில் உள்ள ஹாரத்தின் மணிகளைப் பாருங்கள் - நடுவில் உள்ள மணிகளைப் பெரிதாகவும், தோள்களின் மேல் செல்லும் பொது அவையே சிறிதாகவும் தெரியும்படி தீட்டி - நம்மை மயக்குகிறான் ஓவியன்.

இவனன்றோ சிறந்த ஓவியன் !

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , ,

தொடர்புடைய இடுகைகள்:

 Page 1 of 91  1  2  3  4  5 » ...  Last »